சைவம்பூரி

பாலக் பூரி

paalak poori

சமைக்க தேவையானவை


  • கோதுமை மாவு – 2 கப்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • சீரகம் – கால் டீஸ்பூன்
  • பாலக் கீரை (பசலைக் கீரை) – ஒரு கட்டு
  • மிளகாய்தூள் – கால் டீஸ்பூன்
  • நெய் அல்லது எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு


செய்முறை


பசலைக் கீரையை ஆய்ந்து, கழுவி, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு, தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம், நெய் அல்லது எண்ணெய், மிளகாய்தூள் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

தண்ணீருக்கு பதிலாக பாலக் கீரை அரைத்த விழுதைச் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளலாம்.

பிசைந்த மாவை சிறு பூரிகளாக தேய்த்துப் பொரித்தெடுக்கவும். (குறிப்பு: கீரையை அரைக்கும் போது, ஐஸ் வாட்டர் தெளித்து அரைத்தால் பச்சை நிறம் அப்படியே இருக்கும்).

வீடியோ இணைப்பு

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button