
சமைக்க தேவையானவை
- அரிசி மாவு-1/2 கப்
- பால்-1/2 கப்
- தண்ணீர்-தேவையான அளவு
- சர்க்கரை-1/2 கப்
- நெய்-2 ஸ்பூன்
- ஏலக்காய் பொடி-2 கிராம்
- உப்பு-தேவையான அளவு
- குங்குமப்பூ-சிறிது
- பிஸ்தா-5-6
- பாதாம்-5-6
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் அரிசி மாவு, பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் மாவை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கட்டி உண்டாகாமல் கிளறி விட வேண்டும். 10 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும்.
மாவை நன்கு ஆறவைத்த பிறகு அதில் நெய்யை ஊற்றி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்க வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு உருண்டிய மாவை பாலில் போட்டவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். 20 நிமிடத்தில் இனிப்பான பால் கொழுக்கட்டை தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1