
சமைக்க தேவையானவை
- பிரெட் – 6
- எண்ணெய் -தேவையான அளவு
- தேங்காய்ப்பால் – 1 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். பிறகு சூடான எண்ணெயில் பிரெட் துண்டுகளை பொறித்து கொள்ளவும். பின்னர் தவாவில் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
10 நிமிடம் கழித்து பொரித்த பிரெட்டை சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கணும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். கடைசியில் ஏலக்காய் தூளை தூவினால் சுவையான இனிப்பான பிரெட் அல்வா ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1