பாஸ்ட் ஃபுட்பீட்சா

பிரெட் பீட்சா

சமைக்க தேவையானவை


  • சாண்ட்விச் பிரெட் – 4 துண்டுகள்
  • தக்காளி நறுக்கியது – கால் கப்
  • வெங்காயம் நறுக்கியது – கால் கப்
  • குடைமிளகாய் – கால் கப்
  • பன்னீர் துருவியது – கால் கப்
  • சீஸ் துருவியது – கால் கப்
  • கொத்தமல்லி தழை நறுக்கியது – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவைக்கு
  • மிளகாய் அல்லது மிளகு தூள் – அரை தேக்கரண்டி


செய்முறை


தவாவை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். அடுப்பை சிறுதீயில் வைக்க வேண்டும். பிரெட் துண்டுகளை தவாவில் வைத்து அவற்றின் மேல் நறுக்கிய காய்கறிகளை பரவலாக வைக்க வேண்டும். பின் அதன் மேல் துருவிய பன்னீர் மற்றுத் துருவிய சீஸ்ஸை தாராளமாக தூவ வேண்டும்.

அதற்கு மேல் தேவையான உப்பு, மிளகுத்தூள் தூவி மிதமான தீயில் வேக விட வேண்டும். இப்போது காய்கறிகள் தேவையான அளவு வெந்து சீஸ் நன்றாக உருக ஆரம்பித்து காய்கறிகள் மேல் பரவ ஆரம்பிக்கும்.

உருகிய சீஸ் காய்கறிகளின் மேல் சீராக பரவும் அதே நேரம் நல்ல நறுமணமும் வர ஆரம்பிக்கும். இந்த தருணத்தில் அடுப்பில் இருந்து எடுத்து பரிமாறுங்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பிரெட் பீட்சாவை ருசித்து சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button