
சமைக்க தேவையானவை
- கவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, முசுமுசுக்கை கீரை 1/2 கிண்ணம்
- எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
- மிளகு தூள், இஞ்சி, பூண்டு சிறிதளவு
- பீட்ரூட் 1 சிறியது
செய்முறை
முதலில் பீட்ரூட்டை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். கவுனி அரிசி மாவு மற்றும் கோதுமை மாவுடன் அரைத்து வைத்துள்ள பீட்ருட், சுத்தம் செய்து வைத்துள்ள கீரை, மிளகு தூள், இஞ்சி, பூண்டு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, கைகளால் சிறு சிறு சப்பாத்திகள் போல் தட்டி, தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால், கமகமக்கும் பீட்ரூட் – முசுமுசுக்கை பரோட்டா தயார். பின்பு பரிமாறவும்
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1