
சமைக்க தேவையானவை
- பீட்ரூட்- 4
- பால்- 1 கப்
- நெய்- 1 கப்
- சர்க்கரை- 3/4 கப்
- ஏலக்காய் பொடி- தேவையான அளவு
- முந்திரி- தேவையான அளவு
செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும். மிக்சியில் நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வழுவழுப்பாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் நறுக்கிய முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பீட்ரூட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். 5 நிமிடத்திற்கு பிறகு அதில் பால் சேர்த்து 15 நிமிடம் சமைக்கவும். அடுத்து அதில் ¾ கப் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
ஏழு நிமிடத்திற்கு பிறகு சிறிது நெய் சேர்த்து இறக்கினால் சூடான பீட்ரூட் பாயாசம் தயார். கடைசியில் பீட்ரூட் பாயாசத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் முந்திரியை அலங்கரித்து சூடாக பறிமாறுங்கள்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1