கூட்டு/பொறியல்சைடீஸ்

புடலங்காய் கூட்டு

சமைக்க தேவையானவை


  • பாசிப்பருப்பு – கால் கப்
  • சிறிய புடலங்காய் – 2
  • காய்ச்சிய பால் – கால் கப்
  • மஞ்சள்தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கு
  • கடுகு, சீரகம் – சிறிதளவு
  • உளுத்தம்பருப்பு – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 2
  • பெ.வெங்காயம் – 1
  • நெய் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு


செய்முறை


பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். புடலங்காயை வட்ட வடிவத்தில் சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாசிப் பருப்பை வேக வையுங்கள்.
அதனுடன் புடலங்காய், வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள்.

புடலங்காய் நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிது நேரம் ஆறவைத்துவிட்டு காய்ச்சிய பாலை ஊற்றி கிளறுங்கள். பின்னர் வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டு கலவையில் கலந்து பரிமாறுங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button