
சமைக்க தேவையானவை
- கோதுமை மாவு – 2 கப்
- உப்பு
- புதினா – 3/4 கப்
- எண்ணெய்
- நெய்
செய்முறை
முதலில் கோதுமை மாவுடன் பொடியாக நறுக்கிய புதினா இலை, உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின் பெரிய உருண்டைகளாக எடுத்து திரட்டி இரண்டு பக்கமும் எண்ணெய் தேய்க்கவும்.
புடவை மடிப்பு போல் மடித்து மீண்டும் சுருட்டி வைக்கவும்.சுருட்டி வைத்த மாவின் மேல் சிறிது எண்ணெய் விட்டு வைக்கவும்.எல்லா மாவையும் இது போல் செய்த பின் முதலில் சுருட்டி வைத்த மாவை எடுத்து மீண்டும் சப்பாத்தியாக திரட்டவும்.
தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் ஒரு முறை திருப்பி போட்ட பின் தேக்கரண்டி கொண்டு நெய் தேய்த்து இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். 3 அல்லது 4 பரோட்டா செய்ததும் இரண்டு கைகளுக்கும் நடுவே பரோட்டாவை வைத்து அடித்து விடவும். சுவையான சாஃப்டான புதினா பரோட்டா தயார்.