சாப்பாடுபுலாவ்வெரைட்டி ரைஸ்

புலாவ்

Pulao

சமைக்க தேவையானவை


 • பாஸ்மதி அரிசி – 1 கப்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு
 • தாளிக்க :
 • நெய் – 2 மேசைக்கரண்டி
 • எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
 • சீரகம் – 2 மேசைக்கரண்டி
 • பிரிஞ்சி இலை – 1
 • பட்டை – சிறிய துண்டு
 • கிராம்பு – 2
 • பெரிய வெங்காயம் – 1


செய்முறை


வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.

சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.

நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் தயார். குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button