
சமைக்க தேவையானவை
- துவரம்பருப்பு – அரை கப்
- புளியந்தளிர் – அரை கப்
- காய்ந்த மிளகாய் – ஒன்று
- பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- குழம்பு வடகம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
- பச்சை மிளகாய் – 2
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
- தக்காளி – தலா ஒன்று
- பெரிய வெங்காயம்
- பூண்டு – 2 பல்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து மலர வேகவிடவும். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கீறிக்கொள்ள வும். வெந்த துவரம்பருப்புடன் புளியந் தளிர், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் குழம்பு வடகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மசித்து வைத்த கல வையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1