சாப்பாடுவெரைட்டி ரைஸ்

புளி ஊறவைக்காத புளியோதரை

Tamarind unripe puliotar

சமைக்க தேவையானவை


 • புளி – 100 கிராம்
 • கடலை பருப்பு – 50 கிராம்
 • உளுத்தம் பருப்பு – 50 கிராம்
 • தனியா – 2 ஸ்பூன்
 • வெந்தயம் – ஒன்றரை ஸ்பூன்
 • எள் – 3 ஸ்பூன்
 • மிளகு – ஒரு ஸ்பூன்
 • சீரகம் – ஒரு ஸ்பூன்
 • வரமிளகாய் – 20
 • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
 • மஞ்சள் தூள் – ஒரு ஒரு ஸ்பூன்
 • பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
 • எண்ணெய் – அரை ஸ்பூன்

 


செய்முறை


முதலில் ஒரு சில்வர் பேனை அடுப்பின் மீது வைக்க வேண்டும். அது நன்றாகக் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டிற்க்கு மாற்ற வேண்டும். அதேபோல் உளுத்தம் பருப்பையும் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் இரண்டு ஸ்பூன் தனியா சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் மிளகு, சீரகம், வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஒன்றாக வறுத்து, தட்டிற்க்கு மாற்ற வேண்டும். பிறகு இதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு 3 ஸ்பூன் எள்ளையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் 20 வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பிறகு 50 கிராம் புளியை கொட்டைகள் மற்றும் நார் இல்லாமல் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக கிள்ளி வைக்க வேண்டும். பின்னர் பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, புளியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இன்ஸ்டன்ட் புளியோதரைப் பொடி தயாராகிவிட்டது.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் புளியோதரை பொடி, உப்பு மற்றும் ஒரு கப் சாதம் சேர்த்துக் கிளறினால் போதும். சுவையான புளியோதரை சாதம் உடனே தயாராகிவிடும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button