சைவம்பிரியாணிபிரியாணி சைவம்

புழுங்கலரிசி பிரியாணி

Pulungal Arisi biryani

சமைக்க தேவையானவை


 • புழுங்கலரிசி – கால் கிலோ
 • பிரியாணி இலை – ஒன்று
 • பச்சை மிளகாய் – 3
 • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
 • இஞ்சி – சிறிய துண்டு
 • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
 • பச்சைப் பட்டாணி – கால் கப்
 • தேங்காய் – ஒரு துண்டு
 • பூண்டு – 10 பல்
 • பட்டை, ஏலக்காய், கிராம்பு – தலா 2
 • புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
 • நாட்டுத்தக்காளி – 2,
 • சின்ன வெங்காயம் – 8,
 • வெண்ணெய் – 2 டீஸ்பூன்
 • உப்பு – ஒரு டீஸ்பூன்


செய்முறை

சைவப் பரியர்கள் மட்டுமின்றி பிரியாணி ப்ரியர்களுக்கும் ஏற்ற டிஸ் ஒன்றுதான் புழுங்கலரிசி. இதனை எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டில் நாம் செய்யலாம். மிக மிக எளிமையானது. சரி வாங்க இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவேண்டும் .பின் அரிசியை, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவேண்டும்/ பிறகு தேங்காய், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், ஏலக்காய், இஞ்சி, பூண்டு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அம்மியில் அரைக்கவேண்டும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை தாளித்து, வெங்காயம், தக்காளியை வதக்கி, அரைத்த விழுதுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தனித்தனியாக போட்டு வதக்கவேண்டும்.

இப்பொழுது பச்சைப் பட்டாணியை சேர்த்து மேலும் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும், எல்லாம் நன்றாக வதக்கியதும் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, பாத்திரத்தை மூடி, சிறிது நேரம் கழித்து இறக்கினால், புழுங்கல் அரிசி பிரியாணி ரெடி.


புழுங்கல் அரிசி நன்மைகள்:

தயாமின் சத்து

புழுங்கல் அரிசியில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. அதிலும் வைட்டமின் சட்டத்தின் ஒரு வகையான தயாமின் சத்து இதில் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்பு சம்பந்தமான குறைபாடுகள், இதயத் தசைகள் வலுவிழப்பது, மனநலம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.


நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் எந்த வகையான அரிசி உணவுகளையும் சற்று குறைவான அளவில் எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் புழுங்கல் அரிசியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் எனப்படும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் திறன் அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே எந்த வகை நீரிழிவு நோயாளிகளும் புழுங்கல் அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால் உடல்நலம் மேம்படும்.


குழந்தைகள் நலம்

சிறு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். இப்படிப்பட்ட காலங்களில் குழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியை உணவாக கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். புழுங்கல் அரிசியில் இருக்கின்ற சத்துக்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ஜுரம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை விரைவில் போக்குகிறது.


ரத்த ஓட்டம் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ரத்தத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டியது அவசியமாகும். புழுங்கல் அரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.


மலச்சிக்கல்

நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் புழுங்கல் அரிசியில் நிறைந்துள்ளது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது.


புரதம்

புழுங்கல் அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

குடல் புற்று இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று நோய். புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


ரத்த கொதிப்பு

முப்பது வயதை கடக்கின்ற ஆண்களும், பெண்களும் ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது. புழுங்கல் அரிசி ரத்தத்தில் பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. தாய்ப்பால் குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது.

தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் புழுங்கல் அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும். புழுங்கல் அரிசியின் சத்துகள் நிறைந்த தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button