குழம்புசைவம்

பூண்டு குழம்பு

Garlic broth

சமைக்க தேவையானவை


  • பூண்டு – 10 பற்கள் சின்ன
  • வெங்காயம் – 12 (பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை – சிறிது
  • புளி – 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)
  • குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் புளிச்சாறு ஊற்றி, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான பூண்டு குழம்பு ரெடி.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button