குருமாகுழம்புசைவம்

பேபி கார்ன் மசாலா

Baby corn spice

சமைக்க தேவையானவை


  • பேபி கார்ன் – 1 பாக்கெட்
  • பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • பால் – 1/2 கப்
  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிது
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வெண்ணெய் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வதக்கி அரைப்பதற்கு
  • பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • பூண்டு – 4 பற்கள்
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்


செய்முறை


முதலில் பேபி கார்னை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button