இனிப்பு பொங்கல்பொங்கல்

பேரீட்சை பொங்கல்

Perichai Pongal

சமைக்க தேவையானவை


  • பச்சரிசி – ஒரு கப்
  • வெல்லக்கட்டி – இரண்டு
  • தேங்காய் – நான்கு கீற்றுகள்
  • ஏலக்காய் – மூன்று
  • பேரீட்சை – ஆறு
  • நெய் – நான்கு தேக்கரண்டி
  • பாசிப்பருப்பு – முக்கால் கப்
  • உப்பு – சிறிது


செய்முறை


முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைக்கவும். தேங்காயையும் பேரீட்சையையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்பு தூசில்லாமல் வெல்லத்தை சூடு செய்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பருப்பையும் அரிசியையும் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் குழைய வேக வைத்து எடுக்கவும்.

பின்னர் அதில் கரைத்த வெல்லத்தை ஊற்றி கிளறவும். அதன் பின் அதில் பேரீட்சையை போட்டு சிறுதீயில் அடிப்பிடித்து விடாமல் ஏலக்காய் பொடித்து போட்டு கிளறவும்.

அடுத்து ஒரு சட்டியில் நெய் விட்டு அதில் நறுக்கிய தேங்காயை போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். வறுத்ததை அடுப்பில் இருக்கும் பொங்கலில் கொட்டி கிளறவும். சுவையான பேரீட்சை பொங்கல் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button