காரம்திண்பண்டங்கள்

பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்

Potato Garlic Rings

சமைக்க தேவையானவை


  • ரவை – ½ கப்
  • உருளைக்கிழங்கு – 2
  • சோள மாவு – 2 மேஜைக்கரண்டி
  • பூண்டு – 3 பல்
  • சில்லி ஃப்ளேக்ஸ் – 1 மேஜைக்கரண்டி
  • சாட் மசாலா – ¼ மேஜைக்கரண்டி
  • வெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை


முதலில் பூண்டு மற்றும் கொத்த மல்லியை நன்கு பொடியாக நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி

அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.(தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ரவையை கொட்டி அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து உருக விடவும்.

வெண்ணெய் உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.
அது நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதில் நாம் நைசாக அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து கீழே இறக்கி வைத்து ஆற விடவும்.பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும். அடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து சமமாக தேய்க்கவும். பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.

பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும்,  பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். அதில் நாம் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button