
சமைக்க தேவையானவை
பொன்னாங்கண்ணி இலைச் சாறு – 300 மில்லி
மஞ்சள் – 2 சிட்டிகை
புளித்த சோற்று வடிகஞ்சி – 100 மில்லி
மிளகு – 1 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
சீரகம் – கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
கடுகு – சிறிதளவு
உப்பு-சுவைக்கு
கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், உப்பு,கொத்தமல்லி விதை, மிளகு, சீரகம் இவையனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி அதில் இந்த விழுதை நன்கு வதக்கவேண்டும். பிறகு பொன்னாங்கண்ணி சாறு, புளித்த வடிகஞ்சி இவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு இக்கலவை நன்கு கொதித்து பச்சை வாசனை போன பிறகு, மீதமுள்ள எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும். பொன்னாங்கண்ணி உடலுக்கு குளிர்ச்சியையும், நல்ல கண்பார்வையையும் கொடுக்கும்.