இனிப்புதிண்பண்டங்கள்

பொரிகடலை உருண்டை

Peanut Butter

சமைக்க தேவையானவை


  • அரிசி மாவு-1/2 கப்
  • பொரிகடலை-1/2 கப்
  • தேங்காய் துருவல்-1/2 கப்
  • நிலக்கடலை-1/2 கப்
  • வெல்லம்- 3/4 கப்
  • முந்திரி-5
  • உலர்ந்த திராட்சை-5
  • நெய்-1/2 கப்
  • தண்ணீர்-1/4 கப்
  • ஏலக்காய்-4


செய்முறை


ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். அதே கடாயில் பொரிகடலை, நிலக்கடலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக 1-2 நிமிடம் வறுக்க வேண்டும். வறுத்த கலவையை மிக்சியில் கரகரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வேறொரு கடாயை வைத்து அதில் வெல்லம், தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதும் கரையும்படி சூடுபடுத்தவும். பிறகு அரைத்த கடலை கலவை, நெய், அரிசி மாவு, உலர்ந்த திராட்சை போன்றவற்றை வெல்லத்துடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். கிளறிய மாவை உருண்டையாக உருட்டினால் சுவையான கருப்பட்டி பொரிகடலை உருண்டை தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button