பரோட்டாபாஸ்ட் ஃபுட்

ப்ரெட் பரோட்டா

Bread parotta

சமைக்க தேவையானவை


 • மைதா மாவு – 2 கப்
 • நெய் – 2 டீஸ்பூன்
 • உப்பு – தேவைக்கேற்ப
 • கோதுமை மாவு – 1/2 கப்

  பூரணத்திற்கு


 • ப்ரெட் துண்டுகள் – 3
 • உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும்)
 • இஞ்சி – 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
 • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
 • பச்சைமிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
 • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்


செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு நெய் தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்திக்கு பிசைவதுப்போல் பிசையவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு மற்றும் ப்ரெட் துண்டுகளை தன்ணீரில் நனைத்துப்பிழிந்து இந்த கலவையுடன் கலந்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பிசைந்து வைத்திற்கும் மாவில் கொஞ்சம் எடுத்து சப்பாத்தி பரத்துவதுப்போல் பரத்தி அதன் நடுவில் ப்ரெட் கலவை உருண்டையை வைத்து மூடி லேசாக பரத்தவும். பரத்திய பரோட்டாவை தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து சூடாகவே பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button