கேக்ஸ்வீட்

ப்ளம் கேக் பால்ஸ்

Plum Cake Balls

சமைக்க தேவையானவை


  • ப்ளம் கேக் / ஃபுரூட் கேக் – 2 கப்
  • பட்டர் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்
  • டார்க் சாக்லேட் – ஒரு கப்
  • ஸ்பிரிங்கல்ஸ் – தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு பௌலில் ப்ளம் கேக் அல்லது ஃபுரூட் கேக்கை உதிர்த்து விட வேண்டும். பின் அதில் பட்டர் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து குளிர வைக்கவும்.

பிறகு ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். பின் ஃப்ரிட்ஜில் உள்ள உருண்டைகளை எடுத்து, ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒரு ஸ்பூன் உருகிய சாக்லேட்டை ஊற்றி, மேலே ஸ்பிரிங்கல்ஸ் தூவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டால், சுவையான ப்ளம் கேக் பால்ஸ் தயார்.

குறிப்பு: ஸ்பிரிங்கல்ஸ் இல்லாவிட்டால் விருப்பமுள்ளவர்கள் ப்ளம் கேக் பால்ஸ் மேலே நட்ஸ் அல்லது உலர் பழங்களைத் தூவிக் கொள்ளலாம்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button