பாஸ்ட் ஃபுட்பாஸ்தா

மக்ரோனி

Macroni

சமைக்க தேவையானவை


  • மக்ரோனி – 2 கப்
  • தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 3 கப்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை


முதலில் ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது கொதித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கினால், மக்ரோனி ரெடி. குறிப்பு: 1 டம்ளர் மக்ரோனிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் விட வேண்டும். அதேப் போல் குக்கரை மூடும் முன், மக்ரோனிக்கு மேல் தண்ணீர் உள்ளதா என்று பாருங்கள். இல்லாவிட்டால், சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button