இட்லிசைவம்

மசாலா ஸ்டஃப்டு இட்லி

Stuffed masala idli

சமைக்க தேவையானவை


  • இட்லி மாவு – ஒரு பெரிய கப் அளவு
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • பட்டாணி – 1/2 கப்
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • உருளை கிழங்கு – 2 (பெரியது)
  • உப்பு – தேவைக்கேற்ப


செய்முறை


முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து விடவும். கடுகு, சீரகம் பொரிந்ததும் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்துப் பிரட்டி விட்டு, உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

அதனுடன் பொடி வகைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் துணி போட்டு முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும்.

அடுத்து ஸ்பூனால் மசாலாவை எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான மசாலா ஸ்டஃப்டு இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button