இனிப்புஇனிப்பு பணியாரம்பணியாரம்ஸ்வீட்

மடக்கு பணியாரம்

சமைக்க தேவையானவை


  • அரிசி மாவு – 2 கப்
  • முட்டை – 2
  • சர்க்கரை – 4 டீஸ்பூன்
  • நெய் – 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் பால் – அரை கப்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.

கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.

இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும். வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button