அசைவம்மட்டன்

மட்டன் ஃப்ரை

Mutton Fry | Spicy Mutton Fry | Mutton Roast Recipe

சமைக்க தேவையானவை


  • மட்டன் – 350 கிராம்
  • வெங்காயம் – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  • தயிர் – 100 மில்லி
  • சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • சோம்பு – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய்தூள் – 1 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2


செய்முறை


குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.

 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button