
சமைக்க தேவையானவை
- ஆட்டீரல் – கால் கிலோ
- மிளகுத் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
- இஞ்சி – கால் அங்குலத் துண்டு
- மல்லித் தூள் – ஒரு தேக்கரண்டி
- சீரகம் – அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- வெங்காயம் – 3
- எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
- பூண்டு – 2 பற்கள்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஆட்டீரலுடன் மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு. இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு .
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும். அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
பிறகு ஊற வைத்துள்ள ஈரல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, வேக வைத்து இறக்கவும். பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1