
சமைக்க தேவையானவை
- ஆட்டு எலும்பு – கால் கிலோ
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
- பட்டை – 2 துண்டுகள்
- கிராம்பு – 6
- மிளகு – ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிது
- வெங்காயம் – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.பின்னர் மிளகை உடைத்து வைக்கவும். ஆட்டு எலும்பினை கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும் நேரத்தில் பாத்திரத்தை இறக்கி விடவும் .
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பை தட்டிப் போடவும்.
அவை சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்து விடவும். சூப் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1