
சமைக்க தேவையானவை
- கொத்துக்கறி – 300கிராம்
- வெங்காயம் – 1
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 2
- மல்லி இலை – சிறிது
- கறிவேப் பிலை – சிறிது
- கல்பாசி இலை – சிறிது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி
- பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 11/2 குழிகரண்டி
- மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
- மட்டன் மசாலா தூள் – 4 தேக்கரண்டி
- அரைக்க
- தேங்காய் – 3 துண்டு
- கசகசா – 3 தேக்கரண்டி
செய்முறை
கறியை கழுவிவைக்கவும் வெங்காயம் தக்காளியை நறுக்கிவைக்கவும் மிளகாயைகீறிவைக்கவும் அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைக்கவும் கசகசாவை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டு பின் அரைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டுசூடானதும் கல்பாசி இலை, கறி வேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பட்டை கிராம்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து மிளகாய்த் தூள், மட்டன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கறி உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேகவிடவும் வெந்ததும் அரைத்த தேங்காய்விழுது சேர்த்து மூடி 2 விசில் விட்டு இறக்கவும் இறக்கி மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1