அசைவம்பிரியாணிபிரியாணி அசைவம்மட்டன்

மட்டன் கொத்துக்கறி பிரியாணி

Mutton Koottukari Biriyani

சமைக்க தேவையானவை


  • கொத்துக்கறி – ஒரு கப்
  • பாசுமதி அரிசி – 2 கப்
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க

  • பட்டை, கிராம்பு, பிரியாணி இலை.
  • மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
  • புதினா-மல்லி – கால் கப்
  • கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • நெய், எண்ணெய் – தலா 2 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம், தக்காளி – தலா 1
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


ஒரு பாத்திரத்தில் சாதத்தை முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக்கறியை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

வேறு பாத்திரத்தில் நெய், எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கிகொள்ளவும்.

இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், வேக வைத்த கொத்துக்கறி,உப்பு சேர்த்துக் கிளறவும். தண்ணீர் வற்றி வரும்போது சாதம், புதினா, மல்லி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து சமைக்கவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, வறுத்த முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button