பரோட்டாபாஸ்ட் ஃபுட்

மட்டன் கொத்து பரோட்டா

Mutton kothu parotta

சமைக்க தேவையானவை


 • மட்டன் கொத்துக்கறி – 1/4 கிலோ
 • சின்ன வெங்காயம் – 10,
 • பச்சைமிளகாய் – 1
 • இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
 • தாளிக்க சோம்பு,
 • பிரிஞ்சி இலை – சிறிது
 • கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது,
 • முட்டை – 1
 • பரோட்டா – 2,
 • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
 • உப்பு, எண்ணெய் – தேவைக்கு


செய்முறை


முதலில் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்துக்கறி சேர்த்து நன்கு வேக விடவும்.

முட்டையில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு நுரைக்க அடித்து தோசைக்கல்லில் ஆம்லெட்டாக ஊற்றி துண்டுகள் போட்டு, கொத்துக்கறி கலவையில் சேர்த்து நன்கு கொத்தவும்.

பின்பு பரோட்டா துண்டுகளையும் கொத்துக்கறி கலவையில் போட்டு கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

வீடியோ இணைப்பு

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button