
சமைக்க தேவையானவை
- ஆட்டுக் கறி அரைக்கிலோ
- புதினா-ஒரு கட்டு,பூண்டு-பத்து பற்கள்,பச்சைமிளகாய்-நான்கு
- பிரியாணி அரிசி-அரைக்கிலோ
- வெங்காயம் – 3
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 7
- இஞ்சி,பூண்டு விழுது – 5 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் – பாதி
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- புதினா – சிறிதளவு
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – 2 ஸ்பூன்
- பட்டை – 2
- ஏலக்கய் – 3
- லவங்கம் – சிறிதளவு
-
கிராம்பு – 2
- பிரியாணி இலை – 2
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
மட்டனை கழுவிக்கொண்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டை நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கிழங்கை நான்காக நறுக்கி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி உப்புத்தூள்,மற்றும் எல்லாத்தூளையும் போட்டு,புதினா கொத்தமல்லி பாதியளவு போட்டு கறியையும் கொட்டி நன்கு கலக்கி ஒரு மணி நேரத்திற்க்கு ஊற வைக்கவும்.
வாயகன்ற அடிகனமான சட்டியை காயவைத்து எண்ணெயை மட்டும் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் ஒரு கோப்பையளவு எடுத்து சூடான எண்ணெயில் போட்டு அதனுடன் கறிவேப்பிலை முந்திரியையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்துவைக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் வெண்ணெயை கலந்து முதலில் வாசனை பொருட்களை போடவும்.பிறகு மீதியுள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வறுக்கவும்.அதனுடன் இஞ்சி பூண்டை போட்டு நன்கு வறுக்கவும்.தொடர்ந்து பச்சைமிளகாய் தக்காளியை போட்டு வதக்கவும்.தக்காளியில் உள்ள நீர் வற்றும்வரை நன்கு வதக்கவும்.
பிறகு ஊறிய கறி கலவையை கொட்டி நன்கு வதக்கவும்.அனலை குறைத்து வேகவைக்கவும்.அடி பிடிக்காதவண்ணம் அடிகடி கிளறி விடவும்.கறி நன்கு வெந்தவுடன் கிழங்கைப் போட்டு கிளறிவிடவும்.பிறகு அரிசியை நன்கு கழுவி எடுத்து கறியில் கொட்டி உப்பை போட்டு மீதியுள்ள புதினா கொத்தமல்லி தழையை போட்டு ஐந்து கோப்பை தண்ணீரை அளந்து ஊற்றவும்.
இந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் குக்கரில் ஊற்றி மூடியை போட்டு வேகவிடவும். பிரியாணி தயாறானயுடன் குக்கர் தானாக மித சூடு பதத்திர்க்கு சென்று விடும். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து பிரியாணியைப் பரிமாறும் தட்டில் கொட்டி வறுத்துவைத்துள்ள பொருட்களை போட்டு அலங்கரிக்கவும். தயிர் பச்சடியுடன் சூடாக மட்டன் பிரியாணியை பரிமாறவும்.
குறிப்பு
பிரியாணிக்கு தேவையான பாஸ்மதி அரிசியை நெய்யில் வதக்கி எடுத்துக் கொண்டால் போது தவறுதலாக அதிக விசில் விட்டாலும் சரி, பிரியாணி குழைய வாய்ப்பே இல்லை.
பிரியாணிக்கு வெங்காயம் நிறைய சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிரியாக இருக்கும்.
பிரியாணி பாத்திரத்தில் செய்யும் போது, தம் போடுவதற்கு பிரியாணி பாத்திரத்திற்கு அடியில் தோசைக்கல்லை வைத்து தம் போடலாம்.
பிரியாணியை பொருத்தவரையில் வீட்டு மசாலாக்களை பயன்படுத்துவதை விட, கடைகளில் விற்பனை செய்யப்படும் தரமான பிரியாணி மசாலாக்களை வாங்கிப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
மட்டன் பிரியாணிக்கு சேர்க்கப்படும் கறிக்கு 25 சதவீதம் எலும்பு சேர்த்தால் மணமும், ருசியும் தூள் கிளப்பும்.