
சமைக்க தேவையானவை
- மணத்தக்காளி வத்தல் – 50 கிராம்
- புளி – எலுமிச்சைப்பழ அளவு
- மஞ்சள்த்தூள் – சிறிது
- சாம்பார் வெங்காயம் – 50 கிராம்
- கறிவேப்பிலை – சிறிது
- தக்காளி சிறியது – 1
- மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
- பூண்டு பற்கள் – 10
- உப்பு – தேவையான அளவு
- கடுகு, வெந்தயம் – தாளிக்க
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடுகு, வெந்தயம், மணத்தக்காளி காய்ந்த வத்தல் ஆகியவற்றை நன்றாக வறுத்து பின்னர் பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் சேர்த்து வதங்கிய பின் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார். கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்த மல்லி வதக்கியோ, பச்சையாகவோ சேர்க்கவும். கடைசியில் அப்பளத்தை சிறு துண்டுகளாக வறுத்து குழம்பு கொத்தித்ததும் அதில் போட்டு கலக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1