சைவம்தோசை

மரவள்ளி கிழங்கு தோசை

Cassava Dosa

சமைக்க தேவையானவை


  • பச்சரிசி 1/4 கிலோ
  • மரவள்ளிக் கிழங்கு 1/4 கிலோ
  • பச்சை மிளகாய் 3
  • சீரகம் 1 ஸ்பூன்
  • வெந்தயம் 1 ஸ்பூன்


செய்முறை


முதலில் பச்சரிசியுடன் வெந்தயத்தை ஒரு 3 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளி கிழங்கில் உள்ள தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அரிசி, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

நறுக்கி வைத்த மரவள்ளி கிழங்கை மிக்சியில் அரைத்து மாவில் சேர்த்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு மாவை ஊற்றவும். தோசை நன்றாக வேக சுற்றி எண்ணெயை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியவுடன் மரவள்ளி கிழங்கு தோசையை சூடாக பரிமாறுங்கள்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button