அசைவம்மட்டன்

மாங்காய் மட்டன்

Mango Mutton

சமைக்க தேவையானவை


  • மட்டன் – 1/2 கிலோ
  • கிளிமூக்கு மாங்காய் – 1 (சிறிய துண்டாக நறுக்கியது)
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – 3
  • பச்சை மிளகாய் – 2 (கீறியது)
  • தேங்காய் – 1/2 மூடி துருவியது
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • தனியா – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிதளவு
  • பூண்டு – 4 பல்
  • லவங்கம் – 2
  • பட்டை – 2
  • உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப


செய்முறை


மட்டனை சுத்தம் செய்து நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலி யில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம் ஆகிய வற்றை வறுத்து, ஆறியதும் விழுதாக அரைக்கவும்.

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி மாங்காயை சேர்த்து வதக்கி வேக விடவும். மாங்காய் வெந்ததும் வேக வைத்த மட்டன் மற்றும் மசாலாக் களை சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும். மாங்காய், மட்டன் மசாலா வுடன் சேர்த்து வெந்து திக்கானதும் இறக்கவும். இப்போது மாங்காய் மட்டன் ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button