
சமைக்க தேவையானவை
- உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு
- கறிவேப்பிலை
- பெருங்காயம் – சிறிதளவு
- மாங்காய் வற்றல் – 6
- மிளகு – தலா ஒரு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- கடுகு – அரை டீஸ்பூன்
- புளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைக்கவும். பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, சிறுது எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அரைத்த விழுது, ஊற வைத்த மாங்காய் வற்றல், புளிக் கரைசல் விட்டு… மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்ட பின் இறக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1