
சமைக்க தேவையானவை
- மீன் – அரை கிலோ
- புளி – சிறிதளவு
- பெ.வெங்காயம் – 5
- தக்காளி – 4
- மாங்காய் – 1
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
மீன்களை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். புளியை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். கரைத்த புளிக்கரைசலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போட்டு கிளறிவிடவும். பின்னர் மாங்காய் துண்டுகளை போடவும். மீன் துண்டுகள் நன்கு வெந்து குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி ருசிக்கலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1