
சமைக்க தேவையானவை
- காய்ந்த மாவற்றல் – 10
- வெந்தயம் – 3 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 15
- காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8
- தனியா – 1 டீஸ்பூன்
- மிளகு – 2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்
- எள் – 1 டீஸ்பூன்
- பெரிய தக்காளி – 1
- பூண்டு – 5 பற்கள்
செய்முறை
முதலில் கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், எள் சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளவேண்டும் .
பின்பு அதே கடாயில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவைகளை வதக்கவேண்டும்.
பின்னர் நன்கு வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, அரைத்த மசாலா, மாவற்றலையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1