
சமைக்க தேவையானவை
- பச்சரிசி – ஒன்றரை கப்
- புழுங்கலரிசி – ஒரு கப்
- பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு (அரைத்த மாவை கலந்தது) – ஒரு கப்
- தேங்காய் துருவல் – அரை கப்
- உப்பு– தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- பச்சை மிளகாய் – 4,
- பெரிய வெங்காயம் – 1
- பெருங்காயத்தூள் தேவையானவை, சீரகம் – ஒரு டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை
முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக இரண்டரை மணி நேரம் ஊற வைத்து சிறுது கரகரப்பாக அரைக்கவும். கடைசியாக உப்பு, தேங்காய் துருவல் போட்டு மிக்ஸ்யில் அரைத்து வைத்துகொள்ளவும்.
கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கிய பிறகு .. சிறிது சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கிக்கொள்ளவும் , அதனை எடுத்து மாவில் கொட்டவும்.
தோசைக் கல்லில் மாவை மெல்லியதாக ஊற்றி கொள்ளவும் ,பிறகு இருபுறமும் எண்ணெய் ஊற்றி, தோசை வெந்ததும் எடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1