குழம்பு

மிளகு கறிவேப்பிலை குழம்பு

Milagu Karuveppilai Kulambu

சமைக்க தேவையானவை


  • சுண்டைக்காய் வற்றல் – 1 கப்
  • மிளகு – 5 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – 6 டீஸ்பூன்
  • எள் – 1 டீஸ்பூன்
  • புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு
  • பூண்டு – 5 பற்கள்
  • தனியா – 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிஅதில் மிளகு, பூண்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், எள்ளை வறுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு விரும்பினால் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஆறிய பின் மிக்சியில் போட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

இந்தக் கலவையை கெட்டியாக கரைத்த புளிக்கரைசலில் கலந்து வைக்கவேண்டும் . பின் மற்றொரு கடாயில் 5 டீஸ்பூன் நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

விரும்பினால் சிறிய அப்பளத்துண்டுகளையும் போட்டு பொரித்துக் கொள்ளலாம். பின்பு இதன் மேல் மசாலா கலவையை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button