சைவ சூப்டயட் உணவுகள்

மிளகு தானிய சூப்

Milaku Thaniya Soop

சமைக்க தேவையானவை


  • மிளகு – ஒரு டீஸ்பூன்
  • பிரியாணி இலை – 2
  • ஊற வைத்த பாசிப்பருப்பு – 100 கிராம்
  • வெங்காயம் – 2
  • நறுக்கிய கேரட் – கால் கப்
  • சீரகம், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, பிரியாணி இலை தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், கேரட், ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கியவுடன், எல்லா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

இறக்குவதற்கு முன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button