அசைவ சூப்சூப்

மீன் சூப்

fish soup

சமைக்க தேவையானவை


  • சதைப்பற்றுள்ள மீன் – 6 துண்டுகள்
  • இஞ்சி – ஒரு செ.மீ
  • பூண்டு – 3 அல்லது 4 பல்
  • சின்ன வெங்காயம் – 5 அல்லது 6
  • பட்டை – ஒரு சிறிய துண்டு
  • அன்னாசிப்பூ – ஒன்று
  • ஏலக்காய் – ஒன்று
  • மிளகு தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • வெங்காயத்தாள் (Spring onions) – தேவையான அளவு
  • சூப் இலை – விருப்பப்பட்டால்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை


முதலில் பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய் மூன்றையும் இடித்து வெள்ளை துணியில் முடிந்து வைக்கவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மூன்றையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்

மீனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக மாறி வாசம் வரும் வரை வதக்கவும்

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முடிந்து வைத்துள்ள பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, ஆகியவற்றை சேர்க்கவும்.

நீர் கொதிக்க தொடங்கும் போது, மீனை சேர்க்கவும். அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் சூப் இலையை சேர்க்கவும். சுவையான மீன் சூப் தயார்..

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button