
சமைக்க தேவையானவை
- மீல் மேக்கர் – ஒரு கப்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தனியா தூள் – 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 6 நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு தண்ணீரை நன்கு பிழிந்துவிட்டு,மீல்மேக்கரை பாதி,பாதியாக பிட்டு வைக்கவேண்டும் . பின்பு அவற்றுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவேண்டும்.
விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு விழுது கூட சேர்த்து கொள்ளலாம். பின்பு ஒரு கடாய் அல்லது தவாவில் மீல்மேக்கரை கொட்டி,சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் மீல்மேக்கர் துண்டுகள் நன்றாக சிவக்க வேண்டும்.அவ்வப்போது சிறிது எண்ணெய் சேர்த்து, பொன்னிறம் வரும் வரை நன்கு வறுக்கவும்.
க்ரிஸ்ப்பியாக இருக்கும். பின் மிளகு தூள் சேர்த்து,அடுப்பை அணைத்துவிடவும். சுவையான மீல்மேக்கர் வறுவல் தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1