குழம்பு

மீல் மேக்கர் கிரேவி குழம்பு

Meal Maker Gravy

சமைக்க தேவையானவை


  • மீல் மேக்கர் – 20 (எண்ணிக்கையில்)
  • தக்காளி – 2
  • இஞ்சி பூண்டு விழுது – தேவைக்கு
  • பச்சை மிளகாய் – 3
  • கிராம்பு – 4
  • மிளகாய் தூள் – தேவைக்கு
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • தேங்காய் – கால் கப்
  • உப்பு – தேவைக்கு
  • சின்ன வெங்காயம் – 15
  • எண்ணெய் – தேவைக்கு
  • பட்டை – 3 துண்டு


செய்முறை


முதலில் மீல் மேக்கர் முழ்கும் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து மீல் மேக்கரை அதில் 20 நிமிடம் ஊற வைக்க வேணடும். பிறகு மிக்ஸியில் தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக அரைத்து கொள்ளவும். பின்னர் தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கி நிறம் மாறியவுடன் அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும். பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

3 நிமிடம் கழித்து தண்ணீரில் போட்டு வைத்துள்ள மீல் மேக்கரை நன்றாக தண்ணீரை பிழிந்து விட்டு இந்த கலவையில் போட்டு நன்கு பிரட்டி விடவும். அடுத்து அதில் தேங்காய் விழுது, கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

மீல் மேக்கர் கிரேவி கெட்டியாக தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறி இறக்கவும். பரிமாறவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button