திண்பண்டங்கள்வடை

முட்டைகோஸ் பக்கோடா

Cabbage baguette

சமைக்க தேவையானவை


  • பெரிய வெங்காயம் – 2
  • நீளமாக நறுக்கிய முட்டைகோஸ்- 1 கப்
  • கடலை மாவு – 1 கப்
  • அரிசி மாவு – 1/4 கப்
  • மிளகாய் துாள்- 1/2 டீ ஸ்பூன்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • ஓமம் – 1 சிட்டிகை
  • சீரகம் – 1 டீ ஸ்பூன்
  • சோம்பு – 1 டீ ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது
  • உப்பு – 1 சிட்டிகை
  • சூரிய காந்தி எண்ணெய் – 200 மிலி


செய்முறை


வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். அதோடு, முட்டைகோஸ், சிறிது உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து அதில், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் துாள், நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், ஓமம், சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் சூடான எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து, மிருதுவாக பிசையவும்.

வெங்காயம், முட்டை கோஸ் கலவையில், ஈரப்பதம் இல்லை என்றால், சிறிது தண்ணீர் விட்டு, கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளி போட்டு, மிதமான தீயில், பொன் நிறமாக பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ், தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். சூப்பரான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button