
சமைக்க தேவையானவை
- பயத்தம் பருப்பு—–அரைக்க லேசாக வறுத்துக் கொள்ளவும்
- துவரம் பருப்பு —–அரை கப்
இவைகளைத் தண்ணீர் விட்டுக் களைந்து 6 முறுங்கைக் காய்களை அலம்பி 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிச் மஞ்சள்பொடியும் 3கப் தண்ணீர்ரும் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
வறுத்து அறைக்க
- மிளகாய் வற்றல் 4
- தனியா—-ஒரு டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல்–முக்கால் கப்
- உளுத்தம் பருப்பு—-ஒரு டீஸ்பூன்
- மிளகு —–அரை டீஸ்பூன்
- சீரகம்—-அரை டீஸ்பூன்
- எண்ணெய்—ஒரு டீஸ்பூன்
- திட்டமான தக்காளிப் பழம் -2
- தாளித்துக் கொட்ட –கடுகு
- பெருங்காயம், ஒரு ஸ்பூன்நெய்
- கொத்தமல்லி, கறி வேப்பிலை
செய்முறை
முதலில் வறுக்கக் கொடுத்த சாமான்களை வறுத்து தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் ஜலம் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
பின்னர் தக்காளியையும் வதக்கி அறைப்பதில் சேர்த்து விடவும்.காயும் பருப்புமாக வேக வைத்ததில் அறைத்த கலவையைகறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்துநன்றாகக் கொதிக்க விடவும் நிதானமான தீயில் ஞாபகம்இருக்கட்டும்.
பின்பு இறக்கி வைத்து நெய்யில் கடுகுபெருங்காயம்தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம்.
தனிப்படவும்நிறைய வெங்காயத்தை மாத்திரம்உபயோகித்தும் செய்யலாம்.தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகுவேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து கொள்ளலாம். பரிமாறலாம்.