
சமைக்க தேவையானவை
- முருங்கைக்காய் – 4
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- தக்காளி – 1
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
- மசாலா அரைக்க
- தேங்காய் துருவல் – தேவையானஅளவு
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 10
- காய்ந்த மிளகாய் – 7
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை
முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடிப் பொடியாக வெட்டிக் கொள்ளவும். மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்காய், அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும். ஈசியான முருங்கைகாய் மசாலா தயார். இதே முறையில் முருங்கைக்காய்க்கு பதிலாக கத்தரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1