
சமைக்க தேவையானவை
- முருங்கைக்காய் 6
- தேங்காய் துருவல் அரை கப்
- காய்ந்த மிளகாய் 4
- பச்சரிசி, மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்
- துவரம்பருப்பு ஒரு கப்
- உப்பு தேவையான அளவு
- கடுகு, எண்ணெய் தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவேண்டும் .
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் வேக வைத்த முருங்கைக்காய்களின் நடு சதைப்பகுதியை, ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுத்து தோலை நீக்கி விடவும்.
கடாயில் வேக வைத்த பருப்பு, முருங்கைக்காய் விழுது, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1