சைவம்பூரி

முளைப்பயறு பூரி

mulaipayaru poori

சமைக்க தேவையானவை


  • மைதா மாவு & ஒரு கப்
  • கோதுமை மாவு & ஒரு கப்
  • பாசிப்பயறு & அரை கப்
  • இஞ்சி&பச்சை மிளகாய் விழுது & அரை டீஸ்பூன்
  • சீரகம் & கால் டீஸ்பூன்
  • எண்ணெய் & தேவையான அளவு
  • உப்பு & சுவைக்கேற்ப


செய்முறை


முதலில் பாசிப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு துணியில் கட்டிவைக்கவும். மறுநாள் நன்கு முளைவிட்டுவிடும். முளைகட்டிய பயறை சீரகம் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரைத்த பயறு, இஞ்சி&பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

கோதுமை மாவையும் மைதா மாவையும் உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும்.

அதை செப்புகளாகச் செய்து, நடுவே முளைப்பயறுப் பூரணத்தை வைத்து, பூரிகளாகத் தேய்த்துப் பொரித்தெடுக்கவும்.

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button