காரம்திண்பண்டங்கள்முறுக்கு

முள்ளு முறுக்கு

mullu murukku recipe

சமைக்க தேவையானவை


  • பச்சரிசி – 3 கப்,
  • எள் தேய்த்து காய்ந்தது – 1/2 டீஸ்பூன்,
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கட்டி பெருங்காயம் – சிறிதளவு
  • கடலைப் பருப்பு – 1 கப்
  • பயத்தம் பருப்பு – 1/4 கப்
  • வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை :


நொறுக்குத்தீனியில் (ஸ்னாக்ஸ்) முறுக்கு மிகவும் அவசியமானது. இதனால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். டீ, காபி அருந்தும்போதும் எடுத்துக் கொள்ளலாம். மொறு மொறு வென இருக்கும் இந்த முறுக்கினை பாரதியார் கோவக்காரன் என்று நகைச் சுவையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக இல்லத்தரசிகள் இதனை மிக எளிமையாக வீட்டில் செய்து ஆரோக்கியமான முறுக்கினை வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். முறுக்கு என்பது நமது பாரம்பரிய திண்பண்டம் ஆகும். முறுக்கில் பல வகை உள்ளது அதில் ஒன்றுதான் முள்ளு முறுக்கு. இது முறுக்கைச் சுற்றிலும் முள்போன்று இருக்கும். ஆனால் நாக்கை காயப்படுத்தாது. முறுக்கு பிழியும் கருவியின் அச்சால் வரக்கூடியது. சரி, வாங்க முள்ளு முறுக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். உங்களுக்கு அரைப்பது சிரமாக இருந்தால் நான்கு தலைமுறைகளாக மாவு விற்பனை செய்துவரும் எஸ்விஎஸ் முறுக்கு மாவினை கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான முள்ளு முறுக்கு தயார். ரொம்ப ரொம்ப சிம்பிளாக இதனை செய்துவிடலாம்.


 

உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
ImageImage

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button