
சமைக்க தேவையானவை
தோசை மாவு – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 3
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 2
கடலை மாவு – ஒரு மேசைக்கரண்டி
சிறிய எலுமிச்சை – ஒன்று
கொத்தமல்லித் தழை – 2 கொத்து
உப்பு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். கரண்டியால் மீண்டும் ஒரு முறை உருளைக்கிழங்கை மசித்துவிட்டு கிளறி, அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறிவிடவும்.கடலை மாவுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து, கொதிக்கும் உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி கிளறவும். உருளைக்கிழங்கு கலவை கெட்டியானதும் எலுமிச்சை சாறு பிழிந்து, ஒரு முறை கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். மசாலா தயார்.
தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை எடுத்து மெல்லிய தோசையாக ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேகவிடவும். வெந்ததும் தோசையின் நடுவில் தயார் செய்துள்ள மசாலாவை வைக்கவும்.தோசையின் இரண்டு ஓரத்தையும் இப்படி மடித்து எடுத்து பரிமாறவும்.சூடான, சுவையான மசாலா தோசை தயார்