அசைவம்சாப்பாடுபிரியாணி அசைவம்

ரம்ஜான் மட்டன் பிரியாணி

ramzan briyani

சமைக்க தேவையானவை


  • மட்டன் – 1 கிலோ
  • பாசுமதி அரிசி – 2 கப்
  • தயிர் – 1/2 கப்
  • வெங்காய பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • புதினா – 1 கட்டு (நறுக்கியது)
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தேங்காய் பால் – 1/2 கப்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 2 கப்
  • பட்டை – 2
  • ஏலக்காய் – 4
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கிராம்பு – 4
  • தண்ணீர் – 4 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை


முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு அந்த மட்டனில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.


பின் இரண்டு மணிநேரம் ஆன பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் போட்டு, 5-6 நிமிடம் நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் .பிறகு ஊற வைத்துள்ள மட்டன் மற்றும் புதினாவைப் போட்டு, நன்கு கிளறி 15-20 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி விடவும் .


பின்னர் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து, 45 நிமிடம் மட்டனை வேக வைத்து, இறக்க வேண்டும். பின் அரிசியைக் கழுவி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சாதத்திற்கு கொடுத்துள்ள தண்ணீரை ஊற்றி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு, நன்கு தண்ணீரை கொதிக்க விட்டு, அரிசி மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, மூடி வைத்து 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.


விசில் போனதும் குக்கரை திறந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தைப் போட்டு, அதன் மேல் சிறிது மட்டன் கலவையை பரப்பி, மீண்டும் சாதத்தை போட்டு, மீதமுள்ள மட்டனை பரப்பி, தட்டு கொண்டு மூடி, அடுப்பில் வைத்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து இறக்கி, அதனை கிளறி விட்டால், சூப்பரான மட்டன் பிரியாணி ரெடி.

 

உங்களுக்கு பிடித்துள்ளதா ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்
Source
Image

அம்மா சமையல்

அம்மா சமையல் என்றால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும். அந்த கை பக்குவம் வேற யாருக்கும் வரவே வராது. இன்னும் என்னோடு எங்க அம்மா சமையல் வாசம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி தண்ணீர் என்பதால் எங்க அம்மா எதை வைத்துக் கொடுத்தாலும் அந்த சுவையே தனிதான். இங்கு சமையல் குறித்த தகவல்கள் வழங்குவது எல்லாம் சமைக்கத் தெரியாத மற்றும் சதா ஒரே சமையலை செய்து கொடுக்கும் பெண்களுக்காக இந்த பக்கம். எனது பெயர் கமலி.

Leave a Reply

Back to top button